ADDED : ஜூலை 02, 2026 01:49 AM

அ நிறம் | அளவு
அரூர்: பொறியியல் படிப்பு களுக்கான தரவரிசை பட்டியலில், மொரப்பூர் மாணவி முதலிடம்
பெற்றுள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டி-யலை நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளி-யிட்டார். இதில், 200க்கு, 200 கட் ஆப் பெற்று, மாநில அளவில் தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்-டியை சேர்ந்த மாணவி அக்ஷிதா முதலிடம் பிடித்துள்ளார்.இவரது தந்தை சுரேஷ்பாபு அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மாணவி அக்ஷிதா கம்பை-நல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்
நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர், பிளஸ் 2 பொதுத்-தேர்வில், 600க்கு, 598 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்-கது.
