தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : ஆக 04, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த டி.காணிகர-அள்ளியில் உள்ள வீரபத்திரசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா நடக்கும். அதன்படி, நடப்பாண்டிற்கான கோவில் திரு-விழா, நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபி-ஷேகம் மற்றும் பூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடிபெருக்கு நாளான நேற்று வீரபத்திர சுவாமி கோவிலில் இருந்து குருமன்ஸ் சமூக குலதெய்வ உற்ச-வர்கள் அழைப்பு நிகழ்ச்சி, மங்கள வாத்தி-யங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் நடந்-தது.

தொடர்ந்து, குலதெய்வ உற்சவர்களுக்கு கங்கை நீராடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, குலதெய்வ தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

பின், பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில், டி.காணிகரஅள்ளி, உம்மியம்பட்டி, பாளையம்புதுார், கொமத்தம்பட்டி, இலளிகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us