ADDED : ஆக 05, 2026 04:35 AM
தர்மபுரி:தர்மபுரி
மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,
மாணவியருக்கு ஊக்கப்பரிசு, தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவ,
மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் பல்வேறு சமூக
சேவை செய்து வரும் அமைப்புகளுக்கு பாராட்டு கேடயம் வழங்கும் விழா,
பாப்பாரப்பட்டி கவுரி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்தது.
தர்மபுரி
மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில், 31வது ஆண்டாக நடந்த
விழாவிற்கு, மாவட்ட தலைவர் சந்தோஷ்சிவா தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் சச்சிதானந்தம் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்
அன்பு சதாசிவம் உறுதிமொழி வாசித்தார். மாசிலாமணி, சண்முகம் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். செங்குந்தர் மகாஜன சங்க மாநிலத்தலைவர்
செல்வராஜ் மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள், ஊக்கப்பரிசு மற்றும்
உதவித்தொகைகளை வழங்கி பேசினார். மேலும், பல்வேறு துறைகளில் சாதனை
படைத்தவர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி
கவுரவிக்கப்பட்டது.
