/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முத்து விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம்
/
முத்து விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம்
ADDED : டிச 14, 2025 08:49 AM

பெரும்பாலை: பெரும்பாலை அருகே உள்ள கோவள்ளி கோம்பையிலுள்ள முத்து விநாயகர் மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.பெரும்பாலை அடுத்த சின்னம்பள்ளி அருகே உள்ள கோவள்ளி கோம்பையில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அங்குள்ள முத்து விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து மஹா கும்பாபிஷேக விழா இன்று நடக்க உள்ளது.
இதையொட்டி, அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் பால்குடம் எடுத்து, மேள, தாளங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு, விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து இன்று காலை முத்து விநாயகருக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

