/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'போலி வாக்காளர் நீக்கத்தால் தி.மு.க.,வினருக்கு அச்சம்'
/
'போலி வாக்காளர் நீக்கத்தால் தி.மு.க.,வினருக்கு அச்சம்'
'போலி வாக்காளர் நீக்கத்தால் தி.மு.க.,வினருக்கு அச்சம்'
'போலி வாக்காளர் நீக்கத்தால் தி.மு.க.,வினருக்கு அச்சம்'
ADDED : டிச 14, 2025 08:50 AM

கிருஷ்ணகிரி: ''தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டதால், தி.மு.க.,வினர் அச்சத்தில் உள்ளனர்,'' என, ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதியில், பர்கூர் துரைஸ் நகரில், 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, மற்றும் ஒப்பதவாடி சாலையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாப் என, 34.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அவர் திறந்து வைத்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூரில், 45,000 வாக்காளர்களுக்கு அடுத்த படியாக, பர்கூரில், 25,000 இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலி வாக்காளர்கள், வாக்காளர் சிறப்பு திருத்த முறையில் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். இதனால், தி.மு.க.,வுக்கு தற்போதே சட்டசபை தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டது. இதை வைத்துத்தான், கடந்த காலங்களில் அவர்கள் வெற்றி பெற்றனர். தற்போது கள்ள ஓட்டு போட முடியாததால், தேர்தல் ஆணையத்தை குறை கூறி வருகின்றனர். அ.தி.மு.க.,வுக்கு அந்த பயம் இல்லை. வரும்சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில் வெற்றி பெற்று, இ.பி.எஸ்., தலைமையிலான ஆட்சி வருவது உறுதி.இவ்வாறு, அவர் பேசினார்.

