/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
/
ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
ADDED : டிச 20, 2025 07:10 AM

தர்மபுரி: மார்கழி மாத அமாவாசையில், அனுமன் ஜெயந்தி விழாவை-யொட்டி ஆஞ்சநேயருக்கு, 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்-னிட்டு, ஆஞ்சநேயருக்கு பால், நெய், இளநீர், பழங்கள், சந்-தனம் உட்பட, 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். தர்ம-புரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆஞ்சநேயரை வழி-பட்டு சென்றனர்.
அதேபோல், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் வெள்ளி கவச அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லளிகத்தில் உள்ள கல்-யாண ஆஞ்சநேயர் சந்தன காப்பு அலங்காரம், தர்மபுரி டவுன் எஸ்.வி., சாலையில் உள்ள, அபய ஆஞ்சநேயர் வெள்ளி கவச அலங்காரம், தொப்பூர் கணவாய் மன்றோ குளக்கரை ஜெய வீர ஆஞ்சநேயர் வட மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
* அரூர், மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அனுகி-ரக ஆஞ்சநேயர், கல்யாண சுப்பிரமணியர் கோவிலில், 12ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்-டது. 1,008 வடை மாலை சாற்றுதல், அலங்காரம், சிறப்பு பூஜை, மகாதீபாரதனை நடந்தது. பின்னர் முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.அரூர் பொதுப்பணித்துறை குடியிருப்பில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், அரூர் வாணீஸ்வரர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், அரூர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், தீர்த்தமலை, மொரப்பூர், தென்கரை-கோட்டை வீரசஞ்சிவராமசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில், அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி, வேலவன் குன்று மலை முருகன் விநா-யகர் கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்-ளது. நேற்று அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அறங்காவலர் கார்த்திக், அர்ச்சகர் நடராஜன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ராஜாமணி ஆகியோர் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்-பட்டது. இதேபோன்று பொம்மிடி அடுத்த கதிரிபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநே-யருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜை அறங்கா-வலர் பழனி, தொழிலதிபர் காமராஜ் தலைமையில் நடந்தது. பக்-தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடத்துார் கோதண்ட-ராமர் கோவில், தாளநத்தம் ஆஞ்சநேயர் கோவில், மணியம்பாடி வெங்கட்டரமணசாமி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

