/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க டி.எப்.ஓ.,அறிவுறுத்தல்
/
உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க டி.எப்.ஓ.,அறிவுறுத்தல்
உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க டி.எப்.ஓ.,அறிவுறுத்தல்
உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க டி.எப்.ஓ.,அறிவுறுத்தல்
ADDED : ஆக 23, 2025 01:27 AM
தர்மபுரி தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி வனக்கோட்டம், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை உள்ளடக்கியுள்ளது. இப்பகுதிகளில் சந்தனம், தேக்கு, ஈட்டி, கருவேலம், வாகை மற்றும் இதர மர வகைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதேபோல் யானை, காட்டெருமை, புள்ளி மான், மயில், பன்றிகள் மற்றும் இதர பறவை இனங்கள், அரியவகை வன உயிரினங்கள் உள்ளன. இவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசித்து வரும் மக்கள், யாரேனும் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தால், அதை செப்., 10க்குள் வனத்துறை அலுவலர்கள், போலீஸ் அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடம் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு, ஒப்படைப்பவர்கள் மீது, வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படாது.
இதனை தவிர்த்து, உரிமம் பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தால், செப்.,10க்கு பின், போலீசுடன் இணைந்து, பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் மூலம், மலைக்கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வன கிராமங்களில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.