UPDATED : நவ 09, 2026 01:39 AM
ADDED : நவ 09, 2026 01:14 AM

தர்மபுரி: தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக காணப்பட்ட தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேலம், கோவை, ஈரோடு, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையையொட்டி, வேலைக்கு சென்றவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பி வந்தனர். இதனால், நவ., 5ம் தேதி முதல், ரயில் மற்றும் பஸ்கள் மூலம், தர்மபுரி மாவட்டத்திற்கு மக்கள் வர தொடங்கியதால், அன்று முதல் தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து, டவுன் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி
வழிந்தது.
கடந்த ஒரு வாரமாக,
தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக காணப்பட்ட நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை மக்கள் அவரவர் வீடுகளில் கொண்டாடியதால், பயணிகள் கூட்டமின்றி, பஸ் ஸ்டாண்ட் வெறிசோடி காணப்
பட்டது.
