/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி நகராட்சி விரிவாக்கம் 8 பஞ்சாயத்தை சேர்க்க தீர்மானம்
/
தர்மபுரி நகராட்சி விரிவாக்கம் 8 பஞ்சாயத்தை சேர்க்க தீர்மானம்
தர்மபுரி நகராட்சி விரிவாக்கம் 8 பஞ்சாயத்தை சேர்க்க தீர்மானம்
தர்மபுரி நகராட்சி விரிவாக்கம் 8 பஞ்சாயத்தை சேர்க்க தீர்மானம்
ADDED : பிப் 01, 2024 10:43 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சியை விரிவு படுத்த, நகராட்சி அருகே உள்ள, 8 பஞ்., சேர்த்தல் உள்ளிட்ட, 29 தீர்மானங்கள் கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி நகராட்சி அலுவலகத்திலுள்ள நகர்மன்ற கூட்டரங்கில் நேற்று, நகராட்சி உறுப்பினர்கள் சாதாரண கூட்டம், சேர்மன் லட்சுமிநாட்டான்மாது தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் புவனேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இதில், தர்மபுரி நகராட்சியிலுள்ள, 1 முதல், 17வது வார்டு வரை, 1,547 தெரு விளக்குகள் ஆண்டு பராமரிப்பு பணியை, சஞ்ஜெய் என்ற நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், அப்பணியை மேற்கொள்ள போதிய பணியாளர்கள் இல்லாததால், அதே ஒப்பந்ததாதரை கொண்டு, தெருவிளக்கு மற்றும் சாலைகளில், அனைத்து சென்டர் மீடியனில் உள்ள, மின்விளக்கு உள்ளிட்டவற்றை, பராமரிக்க கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தர்மபுரி நகராட்சியை விரிவுபடுத்த, நகராட்சி அருகே உள்ள இலக்கியம்பட்டி, தடங்கம், ஏ.ஜெட்டிஹள்ளி, அதியமான்கோட்டை, சோகத்துார், செட்டிக்கரை, ஏ.கொல்லஹள்ளி, பழைய தர்மபுரி ஆகிய பஞ்.,க்களை தர்மபுரி நகராட்சியுடன் இணைக்க கடந்த, 2012 ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மேற்கண்ட பஞ்.,க்களை, தர்மபுரி நகராட்சியில் இணைப்பது உட்பட, நகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட, 29 தீர்மானங்களும், கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.