ADDED : ஜூலை 19, 2011 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த அத்திமுட்லு ஆற்றில் மணல் கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த டிராக்டர், ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்தனர். அத்திமுட்லு சின்னாற்றில் மணல் கடத்தப்படுவதாக பாலக்கோடு தாசில்தார் மணிக்கு ரகசிய தகவல் வந்தது. தாசில்தார் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் மணல் கடத்தப்படுவது குறித்து கண்காணித்தனர். அப்போது, ஆற்றில் மணல் எடுத்து கொண்டிருந்த டிரைவர்கள் காவனூர் கணேசன் (32), பெரியசாமி (27) ஆகிய இருவரையும் பிடித்து பாலக்கோடு போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.