/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் தேடும் பணி தீவிரம்
/
ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் தேடும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 19, 2011 12:15 AM
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடலை இரு தினங்களாக போலீஸார் தேடிவருகின்றனர்.
ஆடி 1ம் தேதியையொட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாபு (31). இவர் நேற்று முன்தினம் அவரது நண்பர்கள் ஏழு பேருடன் ஒகேனக்கல் காரில் வந்தனர்.நண்பர்களுடன் சினிஃபால்ஸ், மெயின் அருவி என பல இடங்களுக்கு சென்று விட்டு மாலை 4 மணிக்கு கோத்திகல் பகுதியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பாபு ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். நண்பர்கள் முயற்சித்தும் பாபுவை காப்பாற்ற முடியாததால், ஒகேனக்கல் போலீஸில் தகவல் தெரிவித்தனர். போலீஸார் மற்றும் பரிசல் ஓட்டிகள் பாபுவின் உடலை இரு தினங்களாக தேடி வருகின்றனர்.