/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துப்புரவு பணியாளர் தீயில் கருகி பலி
/
துப்புரவு பணியாளர் தீயில் கருகி பலி
ADDED : ஜூலை 25, 2011 01:35 AM
தர்மபுரி: பாலக்கோடு பேரூராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற துப்புரவு பணியாளர், தீயில் தவறி விழுந்து உடல் கருகி பலியானார்.
மற்றொரு பணியாளர் காயம் அடைந்தார்.
பாலக்கோடு பேரூராட்சியில் தீர்த்தகிரி நகரை சேர்ந்த முருகேசன் (47), முரளி (33) இருவரும் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பாலக்கோடு அருகேயுள்ள பொம்மிடி சாலையில் உள்ள திறந்த நிலை குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. நேற்று முன்தினம் இந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால், குப்பை எரிந்து கொõண்டிருந்தது. முருகேசன், முரளி இருவரும் தீயை அணைக்கும் போது, நிலைத்தடுமாறி தீயில் விழுந்தனர். இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட முருகேசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். முரளி பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.