/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பறிமுதல் வாகனங்கள் ஆக., 5ம் தேதி ஏலம்
/
பறிமுதல் வாகனங்கள் ஆக., 5ம் தேதி ஏலம்
ADDED : ஜூலை 29, 2011 11:37 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள், ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி., அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது.இது குறித்து, மதுவிலக்கு அமல்பிரிவு ஏ.டி.எஸ்.பி., சரவணன் வெளியிட்ட அறிக்கை:மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட எட்டு பைக்குகள், ஆகஸ்ட் 5ம் தேதி காலை 9 மணிக்கு எஸ்.பி., அலுவலகத்தில், பொது ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில் பைக்கை வாங்குபவர்கள், ஏலத்தொகையை உடனே செலுத்தி பைக்குகளை எடுத்து செல்ல வேண்டும்.ஏலத்தில் வாங்கப்படும் பைக்குகளுக்கு ரசீது மட்டும் வழங்கப்படும். ஏலத்தொகையுடன் 12 சதம் விற்பனை வரியும், விற்பனை வரிக்கு 5சதம் சேவை வரியும் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04342-230759 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.