sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆடிப்பெருக்கு விழாவில் இன்று தப்பாட்டம்

/

ஆடிப்பெருக்கு விழாவில் இன்று தப்பாட்டம்

ஆடிப்பெருக்கு விழாவில் இன்று தப்பாட்டம்

ஆடிப்பெருக்கு விழாவில் இன்று தப்பாட்டம்


ADDED : ஆக 03, 2011 01:35 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் இன்று (ஆக.,3) பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் தப்பாட்டம் நடக்கிறது.ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இறுதி நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு சுற்றுலா துறை சார்பில் சென்னை வள்ளி நாடக மன்றம் வளங்கும் இளம் வயது திருமணம் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் தென்னக கலை பண்பாட்டு மையம் மற்றும் சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை சார்பில் சென்னை சேராஸ் மற்றும் பாரதிக்கலைகுழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

காலை 11.30 மணிக்கு பெரியார் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் தர்மபுரி காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சேவலாட்டமும், சுற்றுலாத்துறை சார்பில் பகல் 12.30 மணிக்கு கவிஞர் மாசிலாமணி நடுவராக கொண்டு, 'எதனால் சுற்றுலா மனமகிழ்ச்சி தருகிறது?' தனியா செல்வதினாலா?, குடும்பத்துடன் செல்வதினாலா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், மதியம் 1.30 மணிக்கு சென்னை லாயோலா கல்லூரி மாணவர் டிரம்ஸ் மைக்கெல் வழங்கும் 'எதிலும் இசை பிறக்கும்' இசை நிகழ்ச்சி நடக்கிறது.மதியம் 2.30 மணிக்கு சென்னை சுவாமிநாதன் கலைக்குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சியும், 3 மணிக்கு தர்மபுரி நாயக்கன்கொட்டாய் நத்தம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி வழங்கும் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளித்த நிகழ்சயசியும், மாலை 3.30 மணிக்கு தென்னக கலைப்பண்பாட்டு மையம் சார்பில் பாலக்கோடு குமாரவேல் குழுவினரின் காவடியாட்டமும், மாலை 4 மணிக்கு சுற்றுலாத்துறை சார்பில் தர்மபுரி நேஷனல் மெலலோடிஸ் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு அரூர் கட்டரசம்பட்டி கண்ணப்பநூரா கலைக்குழுவினரின் தெருக்கூத்து நிகழ்ச்சி நடக்கிறது.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அரசின் பல்துறை பணி விளக்க கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. மாலை 4 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடக்கிறது. சப் - கலெக்டர் மரியம் சாதிக் வரவேற்கிறார். கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த அரங்குகளுக்கு கலெக்டர் லில்லி பரிசு வழங்கி பாராட்டுகிறார்.விழாவில், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். சுற்றுலா அலுவலர் (பொ) இளங்கோ நன்றி கூறுகிறார்.






      Dinamalar
      Follow us