நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி கோட்டை பரவாசுதேவ ஸ்வாமி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள்
தாயாருக்கு ஆடிப்பூரம் விழா நடந்தது.ஆண்டாள் பேரவை சார்பில் ஸ்ரீ ஆண்டாள்
தயாருக்கு சிறப்பு பூஜைகளுடன் நடந்த 52ம் ஆண்டு ஆடிப்பூரம் விழாவில்,
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் திருப்பாவையை பாடினர்.
காலை 8 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் திருப்பாவை பாராயணம்
நடந்தது.தொடர்ந்து ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனை, பிரசாதம்
வழங்குதல் மற்றும் தலை விருட்சிகம் ஆதிசக்திக்கு சிறப்பு அபிஷேகம் தீ சட்டி
எடுத்தல் சிறப்பு பூஜைகளும், சுமங்கலி பூஜையும் நடந்தது.ஏற்பாடுகளை
செயல்அலுவலர் முருகன், உதவி ஆணையர் ரமேஷ், கோவில் அர்ச்சகர்
விஜயராகவபட்டாச்சார் ஆகியோர் செய்திருந்தனர்.

