sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போக்குவரத்துக்கு இடையூறாகமீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகள்

/

போக்குவரத்துக்கு இடையூறாகமீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகள்

போக்குவரத்துக்கு இடையூறாகமீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகள்

போக்குவரத்துக்கு இடையூறாகமீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகள்


ADDED : ஆக 03, 2011 01:36 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றி கண்துடைப்பு நடவடக்கையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு முளைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள சாலைகள் மிக குறுகிய அளவில் இருப்பதால், வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாமல் உள்ளது. குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியில் வரும் முகமது அலி கிளப் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் அந்த சாலை கடக்க பெரும் அவதிக்குள்ளாகும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த சாலையில் கடந்த காலங்களில் சாலையோரங்களில் காய்கறி கடைகள் அதிக அளவில் இருந்தது. நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையை தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எச்சரிக்கை செய்ததோடு, பஸ் ஸ்டாண்ட் எதிரே நகராட்சி சார்பில் கட்டப்பட்ட ஜெ.ஜெ., தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாமல் அடம் பிடித்த கடைகளை நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றிய இரு மாதங்கள் வரையில் அந்த பகுதியில் எந்த கடைகளும் இல்லாமல் வாகனங்கள் இந்த சாலையில் எளிதில் சென்று வர வாய்ப்பு கிடைத்தது.கடந்த ஒரு மாதமாக முகமது அலி கிளப் ரோட்டில் கடந்த காலங்களை போல் வழக்கம் போல் நடைபாதையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் துவங்கப்பட்டுள்ளது. டெண்ட் அமைத்து கடைகள் விரிக்கப்படுவதும், அதிகாரிகள் எச்சரிக்கை செய்யும் போது, எளிதில் கடைகளை சுருட்டி எடுத்து செல்வதும் பின்னர் மீண்டும் கடை விரிப்பதும் நடந்து வருகிறது.இது குறித்து போக்குவரத்து போலீஸார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.






      Dinamalar
      Follow us