/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கெரகோடஅள்ளி பச்சியம்மன் கோவில் விழா
/
கெரகோடஅள்ளி பச்சியம்மன் கோவில் விழா
ADDED : ஆக 21, 2011 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் பச்சியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பச்சியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் விழா துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு பெண்கள் மாவிளக்குடன் ஊர்வலமாக சென்றனர். 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைத்தார். இரவில் வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.