/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லாரிக்கு தீ வைப்பதாக மிரட்டிய 2 பேர் கைது
/
லாரிக்கு தீ வைப்பதாக மிரட்டிய 2 பேர் கைது
ADDED : ஆக 23, 2011 01:03 AM
அரூர்: அரூர் அருகே லாரியை நிறுத்தி தீ வைப்பதாக மிரட்டல் விடுத்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இருந்து பீங்கான் லோடு ஏற்றிய லாரி நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அரூர் வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் வெங்கடேஸ் ராவ் (38) ஓட்டி வந்தார். லாரி அரூர் கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு அடுத்த புழுதியூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது, 2 பேர் கை காட்டி தடுத்து நிறுத்தினர். லாரியிலிருந்து கீழே இறங்கிய டிரைவர் வெங்கடேஸ் ராவிடம், 'ஆறு மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது. நீ மட்டும் எப்படி லாரி ஓட்டலாம் என கூறி அவர்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனையும், தீப்பந்ததையும் காட்டி லாரி மீதும், உன் மீதும் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விடுவோம்' என மிரட்டல் விடுத்தனர். டிரைவர் வெங்கடேஸ் ராவ் ஏ.பள்ளிப்பட்டி போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து, பேதாதம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (29), குமார் (30) ஆகியோரை கைது செய்தனர்.