sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் :722 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு

/

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் :722 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் :722 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் :722 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு


ADDED : செப் 01, 2011 11:23 PM

Google News

ADDED : செப் 01, 2011 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 722 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது.

ஹிந்துக்களில் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் ஹிந்து அமைப்புகள், இளைஞர் மன்றங்கள், ஆன்மிக இயக்கங்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் 722 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தர்மபுரி நகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் முதல் சாலையோரங்களில் அதிக அளவில் விநாயகர் சிலைகள் விற்பனை கடைகள் விரிக்கப்பட்டு விற்பனை நடந்தது.



ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்ய விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் மாலையில் இருந்து வாங்கி தாங்கள் பூஜை செய்யும் பொது இடங்களுக்கு விநாயகர் சிலைகளை எடுத்து சென்றனர். வீடுகளில் பூஜை செய்ய வசதியாக நகரில் பல பகுதியில் களி மண் பிள்ளையார் சிலைகள் விற்பனை நடந்தது. களி மண் பிள்ளையார் சிலைகள் விற்பனை செய்யும் இடங்களில் உடனுக்குடன் தயார் செய்து மண்பாண்ட கலைஞர்கள் விற்பனை செய்தனர். ஹிந்து அமைப்புகள் சார்பில் நெல்லிநகர், மாந்தோப்பு, ரயில்வே ஸ்டேஷன் கோட்டை மாரியம்மன் கோவில், கந்தசாமி வாத்தியார் தெருவில் மாணிக்க விநாயகர் கோவில், பொது மாரியம்மன் கோவில், பிடமனேரி இளைஞர் சங்கம், குமாரசாமிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு நேற்று காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.



பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்யவும், பாதுகாக்கவும் இளைஞர்கள் விரதம் இருந்து பூஜைகள் செய்து வருகின்றனர். கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள மாணிக்க விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.



தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் உள்ள சாலை விநாயகர் கோவிலில் நேற்று காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. சாலை விநாயகருக்கு அதிகாலையில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகள் நடந்தது. நகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடந்தது. பூக்களின் விலை மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்தது. மல்லி, கனகாம்பரம் உள்ளிட்டவைகள் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. விநாயகருக்கு பிடித்த அருகம்புல், வெள்ளருக்க மாலை உள்ளிட்டவைகள் 10 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.



பழங்கள் விலையில் சாதாரண நாட்களை விட கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. மாவிலை தோரணங்கள், வாழை இலலை உள்ளிட்டவைகள் விற்பனையும் அமோகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் லேசான மழை பெய்தது. இதனால், விநாயகர் சிலை விற்பனை பாதிக்கும் என மண் பாண்ட கலைஞர்கள் பீதியில் இருந்த நிலையில் நேற்று வரையில் மழை இல்லை. ஆனால், மழைக்கு அறிகுறியுடன் இருண்ட வானிலை இருந்த போதும், மழை இல்லாததால், இந்தாண்டு சிலை விற்பனை அமோகமாக நடந்தது.








      Dinamalar
      Follow us