sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பருவம் தவறிய மா மரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள்

/

பருவம் தவறிய மா மரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள்

பருவம் தவறிய மா மரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள்

பருவம் தவறிய மா மரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள்


ADDED : செப் 08, 2011 01:24 AM

Google News

ADDED : செப் 08, 2011 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் பருவம் தவறிய மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. இந்தாண்டு வழக்கத்தை விட கோடை கால காய்கள் உற்பத்தி அதிகம் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.முக்கனிகளில் முதல் கனியான மா உலகளவில் 63 நாடுகளில் பயிரிடப்படுகிறது. உலக மாம்பழ உற்பத்தியில் 19 மில்லியன் டன்கள் மாம்பழங்களை இந்தியாவில் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மா 55 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் செந்தூரா, அல்போன்ஸா, பெங்களூரா, நீலம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட மா அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.மானாவாரி நிலங்கள் அதிகம் கொண்ட பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் பெங்களூரா ரக மா அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா ரகங்கள் பெரும்பாலும் மாங்கூழ் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு செல்கிறது.மா வெப்ப மண்டல பயிராக இருப்பினும் மித வெப்ப மண்டல பகுதிகளில் நன்கு வளரும்.

வெப்ப மண்டல பகுதியான தர்மபுரி மாவட்டத்தில் மா உற்பத்தியை பொறுத்த வரையில் பருவ நிலை மாறுபாடுகள் காரணமாக மாறுபட்ட உற்பத்தியை கொடுத்து வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1999ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரையில் பருவ நிலைக்கு ஏற்ப உற்பத்தி திறன் மாறுப்பட்டிருப்பதால், இங்கு உற்பத்தி சாராசரி நிலையை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவை பொறுத்த வரையில் ஏப்ரல் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் மா அறுவடை நடக்கும்.மா சாகுபடியை பொறுத்த வரையில் ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க ஆரம்பிக்கும். ஏப்ரல் முதல் அறுவடை துவக்கும். பருவ மாற்றங்கள், முறையான பராமரிப்பு இல்லாத சில மாரங்களில் குறிப்பிட்ட காலங்களில் பூக்கள் பூப்பதில்லை.இந்த மரங்களில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதங்களில் பருவம் தவறிய மரங்களில் பூக்கள் பூத்து குலுங்கும். இந்த பூக்கள் மூலம் நவம்பம் மாதங்களில் கோடை மாங்காய்கள் உற்பத்தி கிடைக்கும். இது எதிர்பார்த்த உற்பத்தி திறனை விட அதிகம் கிடைக்கும் வாய்ப்புண்டு.

இது போன்ற பருவம் தவறிய மரங்களில் பூக்கள் பூத்து, கோடை காய்கள் உற்பத்தி கிடைத்தாலும் அவற்றை பழத்துக்கும், பழச்சாற்றுக்கும் பயன்படுத்த முடியாது. இதனால், இந்த காலங்களில் உற்பத்தி கிடைத்த போதும், விவசாயிகளுக்கு அது போதிய வருவாயை கொடுக்காது.பருவம் தவறிய மரங்களில் காய்த்து அறுவடைக்கு வரும் காய்கள் பெரும் அளவில் ஊறுகாய் மற்றும் சாம்பார் தயாரிப்பு உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவில் பருவம் தவறிய மரங்களில் தர்மபுரி மாவட்ட மா தோட்டங்களில் உள்ள மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளது.குறிப்பாக பென்னாகரம், தர்மபுரி, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள மா தோட்டங்களில் பருவம் தவறிய மரங்களில் பூக்கள் அதிகம் பூத்து குலுங்குவதை பார்க்க முடிகிறது. இது குறித்து சோம்பட்டியை சேர்ந்த விவசாயி சின்னாமி கூறுகையில்,''இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு பருவ தவறிய மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகிறது. இருப்பினும் கோடை காய்களுக்கு விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் ஊறுகாய் தயார் செய்து மதிப்பு கூட்டு பொருட்களாக விற்பனை செய்தால், லாபம் பெறலாம்,'' என்றார்.பயிர் பாதுகாப்பு மிக அவசியம்மா மகசூலை பொறுத்த வரையில் ஒரு ஆண்டு அதிகம் இருந்தால், அடுத்தாண்டு மகசூல் பாதிப்படையும், தர்மபுரி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றங்கள் காரணமாக பூக்கள் உரிய காலத்தில் பூப்பது தடுக்கப்படுகிறது. இதை தவிர்க்க முறையான பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்தால், சீரான பூக்கள் மலர வாய்ப்புள்ளது.முறையான நீர் பாசனம், மக்கிய தென்னை நார் கழிவு இடுதல், கல்டார் போன்ற பயிர் ஊக்கிகள் பயன்படுத்துதல், பரிந்துரை செய்யப்பட்ட ரசாயன உரம், தொழு உரம் இடுதல், கவாத்து செய்தல் மற்றும் காய்ந்த குச்சிகள், பூங்கொத்துக்கள் ஆகியவற்றை நீக்கி முறையான பயிர் பாதுகாப்பு செய்வதன் மூலம் நிலையான மகசூல் பெற முடியும்.






      Dinamalar
      Follow us