sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பொது பாதை ஆக்கிரமிப்பு முதல்வருக்கு புகார் மனு

/

பொது பாதை ஆக்கிரமிப்பு முதல்வருக்கு புகார் மனு

பொது பாதை ஆக்கிரமிப்பு முதல்வருக்கு புகார் மனு

பொது பாதை ஆக்கிரமிப்பு முதல்வருக்கு புகார் மனு


ADDED : செப் 10, 2011 03:34 AM

Google News

ADDED : செப் 10, 2011 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரிபொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொதுபாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து பாதையை மீட்க கோரி தர்மபுரி ரோட்டரி சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தர்மபுரி ஒன்றியம் இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிடமனேரி மேற்கு பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் ரோட்டரி சங்கம் சார்பில் காது கோளதோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் ரோட்டரி சங்கம் முதியோர் ஆதரவு இல்லம் அமைக்கப்பட உள்ளது.இங்கு இறந்தோருக்கு இறுதி சடங்கு செய்யும் பிரம்மதீர்த்தம் மற்றும் மொன்னையன் கொட்டாய் சுடுகாடு பகுதி உள்ளன. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் பாதை பொதுவழிப்பாதையாக இலக்கியம்பட்டி ஊராட்சி அறிவித்துள்ளது.தற்போது, பொதுபாதையை அருகிலுள்ள நிலத்தை பிளாட்களாக மாற்றி விற்று வந்த சிலர் பொதுபாதையையும் ஆக்கிரமித்ததுடன் அதை புல்டோசர் மூலம் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பாகமாக மாற்றி விட்டனர்.பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமிப்பு மூலம் பிரம்மதீர்த்தம், சுடுகாடு ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் எங்களுடைய ரோட்டரி சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ள முதியோர் இல்ல நிலத்துக்கும் செல்ல முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுவழிப்பாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்திட ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.










      Dinamalar
      Follow us