sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையோர குப்பை கழிவால் வரவேற்கும் துர்நாற்றம்

/

சாலையோர குப்பை கழிவால் வரவேற்கும் துர்நாற்றம்

சாலையோர குப்பை கழிவால் வரவேற்கும் துர்நாற்றம்

சாலையோர குப்பை கழிவால் வரவேற்கும் துர்நாற்றம்


ADDED : செப் 18, 2011 01:29 AM

Google News

ADDED : செப் 18, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த மாட்டிலாம்பட்டியில் சாலையோரங்களில் அதிக அளவில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், ஊருக்கு நுழைவு வாயில் பகுதியில் துர் நாற்றம் அடித்து வருகிறது.

தர்மபுரியை அடுத்த மாட்டிலாம்பட்டி தர்மபுரி - கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையில் உள்ளது. வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாக செல்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை என்பதால், எப்போதும் வாகனங்களின் அணி வகுப்பு அதிகம் உண்டு.



தொலை தூரங்களில் செல்லும் வாகனங்கள் மாட்டிலாம்பட்டி பைபாஸ் சாலைகளில் நிறுத்து ஓய்வு எடுத்து செல்வார்கள். இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் பலர் உணவுக்காகவும் நிறுத்தி சாப்பிட்டு செல்வார்கள். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் அதிக அளவில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக மாட்டிலாம்பட்டி பைபாஸ் சாலை பிரியும் பகுதி மற்றும் காரிமங்கலத்துக்கு செல்லும் பிரிவு சாலையோரங்களில் அதிக அளவில் குப்பை கழிவுகள், அந்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவைகள் கொட்டப்படுவதால், அந்த வழியாக சாலையில் செல்வோர் துர் நாற்றத்தை சகிக்க முடியாமல் செல்கின்றனர். வாகனங்களில் சாலையை கடந்து செல்வோரும் முகத்தை சுளித்தபடி செல்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் குப்பை கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








      Dinamalar
      Follow us