sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தோல்வியை கண்டு துவளாதவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி: சுகி சிவம் பேச்சு

/

தோல்வியை கண்டு துவளாதவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி: சுகி சிவம் பேச்சு

தோல்வியை கண்டு துவளாதவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி: சுகி சிவம் பேச்சு

தோல்வியை கண்டு துவளாதவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி: சுகி சிவம் பேச்சு


ADDED : செப் 18, 2011 01:29 AM

Google News

ADDED : செப் 18, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ''தோல்வியை கண்டு துவளாமல் தோல்வியே வெற்றியின் ஒரு பகுதி என நினைத்து செயலாற்றுபவர்கள் வாழ்க்கையில் உயரமுடியும் என சுகி சிவம் தெரிவித்தார்.

தர்மபுரி ஜெயம் இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்களுக்கான வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் தொல்காப்பியரசு தலைமை வகித்தார். டிரஸ்டி பார்வதி ரமேஷ், இயக்குனர்கள் வெங்கடேசன், கோபிநாத், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:சமுதாயத்தில் உயர்ந்தவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆட்டோகிராஃப் வாங்குவதை விட ஆட்டோகிராஃப் போடும் அளவிற்கு வாழ்க்ø கயில் உயர வேண்டும். நம்முடைய குறைகளை கண்டு பயப்படுவதுடன் அதை வெற்றியாக மாற்ற வேண்டும். அழகு, நிறம் போன்றவற்றை பொருட்படுத்தாமல் உழைக்கின்றவர்கள் வாழக்கையில் குறிப்பிட்ட இடத்தை அடைகின்றனர். சிலர் கறுப்பு நிறம் என்று கவலையடைந்து வருகின்றனர். ஆனால், கறுப்பு தான் சிறப்பான நிறமாகும். கோவில்களின் கடவுளின் உருவம் கறுப்பு நிறத்தை கொண்டது. கறுப்பு நிறம் நமது நாட்டில் தனி மவுசு உள்ளது.



தோல்வியை கண்டு பயப்படுபவர்கள் கோழைகளாவர். தோல்வியை வெற்றியின் ஒரு பகுதி என நினைத்து செயலாற்றுபவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகின்றனர். சமுதாயம், சமூகம் ஆகியவற்றில் உதவியை எதிர்பார்க்காமல் தனது சொந்த முயற்சியின் மூலம் வெற்றியடைய முடியும். குறிப்பாக விவேகானந்தர் தியானம் செய்வதற்காக உதவியை எதிர்பார்த்த போது அந்த உதவி கிடைக்காமல் தானே கடலில் நீந்தி சென்று பாறை மீது தியானம் செய்து சாதனை படைத்தவர்.



நம்மில் பலர் சிரிப்பதற்கே சங்கடப்பட்டு வருகின்றனர். பிறந்த ஆறு மாத குழந்தை கூட தின்ம் 247 முறை சிரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த மாணவ காலத்தில் நகைச்சுவையோடு நாள்தோறும் சிரித்து மகிழ வேண்டும். முடிவு எடுக்கும் தகுதியை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்ல முடிவு எடுப்பவர்கள் தலைவராக மாறி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். துறைத்தலைவர் தாண்டவவேல் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us