sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

செம்மை கரும்பு சாகுபடி தொழில் நுட்பம்: வேளாண் துறை அறிவுரை

/

செம்மை கரும்பு சாகுபடி தொழில் நுட்பம்: வேளாண் துறை அறிவுரை

செம்மை கரும்பு சாகுபடி தொழில் நுட்பம்: வேளாண் துறை அறிவுரை

செம்மை கரும்பு சாகுபடி தொழில் நுட்பம்: வேளாண் துறை அறிவுரை


ADDED : செப் 22, 2011 02:36 AM

Google News

ADDED : செப் 22, 2011 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், முன்பருவ கரும்பு சாகுபடி துவங்க உள்ளது. இத்தருணத்தில் கரும்பு சாகுபடியில், செம்மை சாகுபடி முறையை பின்பற்றுமாறு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.தர்மபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் மேகநாதன் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், 30 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்புகள் பாலக்கோடு தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, அரூர் சுப்பிரமணிய சிவ கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் செங்கம் பண்ணாரி அம்மன் கூட்டுறவு சர்க்கரை ஆலை, செங்கம் பண்ணாரி அம்மன் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகிய ஆலைகளுக்கு சர்க்கரை உற்பத்திக்கு செல்கிறது.மேலும், 100க்கும் மேற்பட்ட தனியார் வெல்லம் தயாரிக்கும் தொழிற்சாலை இந்த கரும்பால் பயனடைகின்றனர். இம்மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை கரும்பு சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. மேலும், சர்க்கரை கட்டுமானம் கூடுதலாகவும் கிடைப்பதால் மற்ற மாவட்டங்களை கரும்புக்கு வழங்கப்படும் விலையை விட, தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் கூடுதல் விலை கிடைக்கிறது.பருவ நிலை மாற்றங்கள், முறையற்ற சாகுபடி முறைகள், பூச்சிநோய் தாக்குதலுக்கு போதிய பயிர் பாதுகாப்பு இல்லாமை ஆகியவை கரும்பு விளைச்சலை வெகுவாக பாதிக்கிறது.

ஏக்கருக்கு, 40 மெட்ரிக் டன்னுக்கும் குறைவாக மகசூல் பெறுகின்றனர். இந்நிலையை தவிக்க, செம்மை கரும்பு சாகுபடி முறை மிகச்சிறந்தது.செம்மை கரும்பு சாகுபடி முறையில் ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து நாற்றங்கால் அமைத்தல், இளம் நாற்றுகளை ,(25 முதல் 35 நாட்கள் வரை) எடுத்து நடவு செய்தல், அதிக இடைவெளியில் நடவு செய்தல், தேவையான அளவு மட்டும் நீர்பாய்ச்சுதல், இயற்கை சார்ந்த உரங்கள் பயிர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல், ஊடுபயிர் சாகுபடி மூலம் மண்வளம் மற்றும் மகசூல் அதிகரித்தல் ஆகியவைளை செம்மை கரும்பு சாகுபடியின் கோட்டுபாடுகள் ஆகும்.நாற்றங்கால் சாதாரணமாக கரும்பு நடவுக்கு, 2 அல்லது 3 பருவ விதைக்கரணைகள் பயன்படுத்தப்படுகிறது. செம்மை கரும்பு சாகுபடி முறையில் ஒரு விதைப்பருவை கரும்பில் இருந்து அரைவட்ட வடிவில் வெட்டி எடுத்து தரமான அச்சீவல்களை கொண்டு 'பரோடிரே' எனப்படும் குழித்தட்டுகளில் மக்கிய தென்னை நார்கழிவை பயன்படுத்தி நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.இதன் மூலம் அதிகளவு முளைப்புத்திறனை, குறைந்த நாட்களில் அடைய முடிகிறது. நாற்றங்காலில் நாற்றுகள் 25 முதல் 30 நாட்கள் வயது அடைந்தவுடன் வேர்ப்பகுதியில் உள்ள தென்னைநார் கழிவுடன் சேர்த்து நடவு செய்ய வேண்டும். அச்சமயம், 4 முதல் 6 இலைகள் கொண்டவையாக இருக்கும். சாதாரண முறையில், 2 மாதங்களில் அடையப்படும் வளர்ச்சியானது இம்முறையில் ஒரே மாதத்தில் அடைகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us