sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி மாவட்டத்தில் 624 பேர் போட்டியின்றி தேர்வு

/

தர்மபுரி மாவட்டத்தில் 624 பேர் போட்டியின்றி தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் 624 பேர் போட்டியின்றி தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் 624 பேர் போட்டியின்றி தேர்வு


ADDED : அக் 05, 2011 01:23 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஏழு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவி உள்ளிட்ட 624 பதவியிடங்களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி தலைவர் பதவி, நகராட்சி கவுன்சிலர் 33 பேர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் 188, டவுன் பஞ்சாயத்து தலைவர் 10, டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் 159, நகராட்சி கவுன்சிலர் 33, கிராம பஞ்சாயத்து தலைவர் 251, கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் 2 ஆயிரத்து 343 பதவிகள் உள்ளிட்ட மொத்தம் 3 ஆயிரத்து 3 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.இதில், போட்டியிட மொத்தம் 12 ஆயிரத்து 709 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 12 ஆயிரத்து 409 வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த காலங்களில் கிராம அளவில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிக எண்ணிக்கையில் போட்டடயின்றி தேர்வு முறை இருந்து வந்தது.இந்த முறை தேர்தல் கமிஷன் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தாலும், மக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படததாலும் போட்டியின்றி தேர்வு முறைகள் குறைந்தது. இதனால், கடந்த காலங்களில் ஊர் கூடி போட்டியின்றி தேர்வு செய்யும் முறை இந்த முறை மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

இதையும் மீறி சில பஞ்சாயத்துக்களில் ஊர் மக்கள் முடிவு செய்துள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே ஓட்டு போட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் ஓட்டு போட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் வேட்பாளர் வாபஸ் பெற கடைசி நாள். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்ற பின் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை மற்றும் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கேட்டுள்ள சின்னங்கள் அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கீடு நடந்தது.வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் நேற்று முன்தினம் மாலை 3 மணி வரையில் மொத்தம் 3 ஆயிரத்து 144 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. மாவட்ட கவுன்சிலர் 18 பதவிகளுக்கு 128 பேரும், 188 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 994 பேரும், 251 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 989 பேரும், 2 ஆயிரத்து 343 வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரத்து 578 பேரும், நகராட்சி தலைவர் பதவிக்கு 13 பேரும், 33 நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 202 பேரும், 10 டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 68 பேரும், 159 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 650 பேரும் போட்டியிடுகின்றனர்.

மொரப்பூர் பஞ்சாயத்து யூனியன் நான்கு பஞ்சாயத்துகள், நல்லம்பள்ளி யூனியனில் இரு பஞ்சாயத்துக்கள், தர்மபுரி யூனியனில் ஒரு பஞ்சாயத்து உள்ளிட்ட ஏழு பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களில் 610 பேரும், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆறு பேர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us