sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேர்தல் விதி மீறல் 7 ஆட்டோக்கள் பறிமுதல்

/

தேர்தல் விதி மீறல் 7 ஆட்டோக்கள் பறிமுதல்

தேர்தல் விதி மீறல் 7 ஆட்டோக்கள் பறிமுதல்

தேர்தல் விதி மீறல் 7 ஆட்டோக்கள் பறிமுதல்


ADDED : அக் 11, 2011 01:43 AM

Google News

ADDED : அக் 11, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரிதேர்தல் விதிமுறை மீறி ஆட்டோக்களில் ஃப்ளக்ஸ் போர்டு வைத்து பிரச்சாரம் செய்ததாக, ஏழு ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வது குறித்து தேர்தல் கமிஷன் நன்நடத்தை விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் அலுவலர்கள் குழு பல்வேறு இடங்களில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.பிரச்சாரத்தின் போது, அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஃப்ளக்ஸ் போர்டுகள் ஆட்டோக்களில் வைத்து பிரச்சாரம் செய்வது, கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தர்மபுரி டவுன் மற்றும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்களில் வேட்பாளர்கள் அனுமதி பெறாத ஆட்டோக்களில் ஃப்ளக்ஸ் போர்டுகளை வைத்து பிரச்சாரம் செய்தது தெரிந்தது.தர்மபுரி டி.எஸ்.பி., சந்தானபாண்டியன் தலைமையில் போக்குவரத்து போலீஸார் விதிமுறை மீறி பிரச்சாரம் செய்த நேற்று ஏழு ஆட்டோக்களை நேற்று பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே விதிமுறை மீறிய ஆறு ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us