sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரச்சாரம்

/

அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரச்சாரம்

அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரச்சாரம்

அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரச்சாரம்


ADDED : அக் 11, 2011 01:43 AM

Google News

ADDED : அக் 11, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அரூர் யூனியனுக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் எம்.வெளாம்பட்டி, மருதிப்பட்டி, ஈச்சம்பாடி, வடுகப்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, ஒசடல்பட்டி ஆகிய கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அ.தி.மு.க.,வினர் வீடுகளுக்கு சென்று அமைச்சர் பழனியப்பன் சந்தித்து அவர்களை சமாதானப்படுத்தினார்.மேலும் அவர்களுக்கு அடுத்தமுறை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனால் அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்கள் அமைச்சர் நேரடியாக தங்கள் வீடுதேடி வந்து பேசுவதால் அதிருப்தி மறைந்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அமைச்ச்ர் பழனியப்பன் கிராம பகுதிகளுக்கு செல்லும் போது தமிழக அரசின் சாதனைகளை கூறி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் சந்தித்து வருகிறார்.ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் முருகேசன், கீரை சம்பத், செண்பகம், சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us