ADDED : ஜூலை 11, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
பாலக்கோடு; பாலக்கோடு அருகே, சூடனுார் கிராமத்தில் வன விலங்குகளை வேட்டையாட மின்வேலி அமைத்தவரை, வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, சூடனுார் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், 47, என்பவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கரடு பகுதியில், மின் கம்பத்திலிருந்து ஒயர் மூலமாக கொக்கி மாட்டி, வன விலங்குகளை வேட்டையாட, திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரனை கைது செய்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின்படி, 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
