ADDED : ஜூலை 11, 2026 05:49 AM

தர்மபுரி; மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில், குறைந்தபட்ச ஊதியம் வழங்ககோரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் திலகவதி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில துணைத்தலைவர் நாகராசன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் கவிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்பட்டு வரும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், பணிபுரியும் பெண் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று மருத்துவ சேவை செய்கின்றனர். கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வரக்கூடிய ஊழியர்களை, தொழிலாளிகளாக அங்கீகரித்து, சட்டப்படியான உரிமைகளை வழங்கி பணி நேரத்தை வரன்முறை படுத்த வேண்டும். ஊக்கத்தொகை என்பதை மாற்றி ஊதியமாக வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம், 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
