ADDED : ஜூலை 11, 2026 05:50 AM

பென்னாகரம்;
பென்னாகரத்தில், போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த கல்லுாரி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.பென்னாகரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த, 18 வயது மதிக்கத்தக்க கல்லுாரி மாணவி, கடந்த மாதம் 24ல், திருமணமாகாத நிலையில், பிரசவ சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், பென்னாகரம் மகளிர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சீலநாயக்கனுாரை சேர்ந்த கல்லுாரி பஸ் டிரைவர் சதாசிவம், 30, மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, சதாசிவம் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஏரியூர் பகுதியில் தலைமறைவாக இருந்த சதாசிவத்தை, பென்னாகரம் மகளிர் போலீசார் கைது செய்து, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
