தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்தம்
தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்தம்
ADDED : ஜூலை 11, 2026 05:58 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில், 59 அரசு டாஸ்மாக் கடை-களில், 326 பணியாளர்கள் உள்ளனர். இதில், டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில், பணி நிரந்-தரம், காலமுறை ஊதியம், காலி மதுபான பாட்-டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் வாங்கு-வதை ரத்து செய்தல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று வேலைநி-றுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணி-யாளர்கள், 129 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இந்த போராட்டத்தால் மாவட்-டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
