ADDED : பிப் 03, 2024 04:07 AM
நான்காவது நாளாக
காத்திருப்பு போராட்டம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் முன், வீட்டுமனைப்பட்டா வழங்ககோரி, கடந்த, 30 முதல், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர், மாநில செயலாளர் முத்து தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டம் நடக்கும் இடத்தில் சமையல் செய்து, சாப்பிட்டு, அங்கேயே துாங்கி, போராட்டத்தை விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்துள்ளனர்.
அரூரில் தி.மு.க.,
ஆலோசனை கூட்டம்
அரூர்: அரூரில், தி.மு.க., பஞ்., பொறுப்பாளர்கள், ஓட்டுச்சாவடி ஏஜன்ட்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ரூ.21 லட்சத்துக்கு
ஆடுகள் விற்பனை
கம்பைநல்லுார்:
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் வாரச்சந்தைக்கு நேற்று, 230க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,400 முதல், 6,700 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், 21 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு ஊர்வலம்
அரூர்: அரூர் அரசு மருத்துவமனை சார்பில், சாலை பாதுகாப்பு விழா ஊர்வலம் நேற்று நடந்தது. அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தை, மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் துவக்கி வைத்தார். கச்சேரிமேடு, தாலுகா அலுவலகம் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் மருத்துவமனையில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் தனியார் நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவியர், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இல்லம் தேடி கல்வி
மையத்தில் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்ட கடத்துார் அடுத்த, மடதஅள்ளி அரசு தொடக்கப்பள்ளி உட்பட நான்கு இல்லம் தேடி கல்வி மையங்களில், கடத்துார் வட்டார கல்வி அலுவலர் முருகன் ஆய்வு செய்தார். அப்போது, மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல் முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசு, தன்னார்வலர் மாலதி உடனிருந்தனர்.

