/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மூதாட்டி கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்
/
மூதாட்டி கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்
மூதாட்டி கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்
மூதாட்டி கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்
ADDED : ஜூலை 14, 2025 04:14 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆட்டையானுாரை சேர்ந்-தவர் வேடியப்பன். இவரது மனைவி கம்சலா, 70. இவர் கடந்த, 10ல் அதே பகுதியை சேர்ந்த சிவஞானம் என்பவரின், மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் நெற்றியில் காயமும், மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது காதில் இருந்த தோடு திருடு போகவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து, 11, 12 ஆகிய இரண்டு நாட்களும், அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து முகாமிட்ட எஸ்.பி., மகேஸ்வரன், கம்சலா கொலை குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்-டர்கள் செந்தில்ராஜ் மோகன், லட்சுமி ஆகியோர் அடங்கிய தனிப்-படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நிலத்தகராறு காரணமா அல்லது முன்விரோதத்தில் நடந்த கொலையா என, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட போதிலும், இதுவரை குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் திணறி வருகின்-றனர்.