/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
/
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED : அக் 07, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியிலுள்ள, திரவுபதி அம்மன் கோவிலில், திரவுபதி, தர்மராஜர், அர்ச்சுணன், பீமன், சகாதேவன், கிருஷ்ணன், அபிமன்யூ உள்ளிட்ட, 17 கடவுள்களின் சிலை உள்ளது.
இக்கோவில், கூத்தப்பாடி, குள்ளாத்திரம்பட்டி, பொச்சாரம்பட்டி, அளேபுரம், அக்ரஹாரம், மடம், சின்னப்பநல்லுார் உள்ளிட்ட, 7 ஊர்களுக்கு பொதுவானது. புரட்டாசி, 3வது சனிக்கிழமையில் கோவில் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் தொடங்கிய திருவிழா கூத்தப்பாடியில் சுவாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நேற்று, தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

