ADDED : ஆக 10, 2026 01:43 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்-ளிட்ட பகுதிகளில் கடந்தாண்டு, பருவமழை போதியளவில் பெய்-யாததால், தடுப்பணைகள், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போனதுடன், ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது.
மேலும், தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்-டுள்ளதுடன், கால்நடைகளுக்கும் தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. நேற்று முன்தினம் இரவு அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. தொடந்து, நேற்று, 2வது நாளாக, மாலை, 4:30 மணிக்கு அரூரில் சாரல்மழை பெய்-தது. கனமழையை எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த, 2 நாட்க-ளாக பெய்த சாரல்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.
