/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பூக்கடை நடத்த இடத்தை பிரிப்பதில் தகராறு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ADDED : செப் 06, 2025 01:08 AM
ஓசூர், ஓசூரில், பூக்கடை நடத்துவதற்கு இடத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால், பெண் தீக்குளிக்க முயன்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு அடியில், வியாபாரிகள் பூ வியாபாரம் செய்கின்றனர். சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்வதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேம்பாலத்திற்கு அடியில் கடை வைத்திருந்த தேவிகா என்பவர், சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவர் கடை வைத்திருந்த இடத்தையும் சேர்த்து, ராம்நகரை சேர்ந்த பார்வதி, 45, என்பவர் கடை வைத்து பூ வியாபாரம் செய்து வருகிறார்.
உயிரிழந்த தேவிகாவின் மகன் வேல்முருகன், தனது தாய் நடத்தி வந்த கடை பகுதியை வழங்குமாறு பார்வதியிடம் கேட்டார். அதற்கு குறைந்த அளவில் இடத்தை பார்வதி ஒதுக்கி
கொடுத்தார்.
ஆனால், தனது தாய் வைத்திருந்த இடம் முழுதும் வேண்டும் என, வேல்முருகன் கேட்டுள்ளார். இதையறிந்த மற்ற பூ வியாபாரிகள், இருவரையும் சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. இந்நிலையில், நேற்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பார்வதி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்தவர்கள், பார்வதி உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து, இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.