ADDED : பிப் 17, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவி-லான, வில்வித்தை போட்டிகள் நேற்று நடந்தது. இதில், 8, 10, 12, 14 வயதுக்கு உட்பட்டோர் என, 4 பிரிவு
களில், 250 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்-டியை, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிர-மணி தொடங்கி வைத்தார்.
இதில், ஒன்றிய பொருளாளர் தண்ட-பாணி, அவைத்தலைவர் செல்வராஜ், முன்னாள் நகர செயலாளர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி டிராகன் வில்-வித்தை பயிற்சி அறக்கட்டளை தலைவர் சிவக்குமார், செயலாளர் சக்திவேல், பொருளாளர் ரம்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

