ADDED : ஆக 01, 2026 04:56 AM

பாப்பிரெட்டிப்பட்டி; தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த கேரம் போட்டியில், ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து-கொண்டனர். பெண்களுக்கான, 19 வயதுக்குட்-பட்டோர் ஒற்றையர் பிரிவில், தனுசியா முத-லிடம்; இரட்டையர் பிரிவில் தனுசியா மற்றும் செங்கொடி முதலிடம் பிடித்தனர்.
ஆண்களுக்கான, 14 வயதுக்குட்பட்டோர், ஒற்-றையர் பிரிவில் சரண்பாபு முதலிடம்; 19 வயதுக்-குட்பட்டோர், ஒற்றையர் பிரிவில் அகிலேஷ் முதலிடம், இரட்டையர் பிரிவில் அகிலேஷ் மற்றும் ஆகாஷ் முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்
களையும், பயிற்சியளித்த ஆசிரியர்கள் சத்யராஜ், சரண், ஸ்ரீவர்த்தினி ஆகியோரை தாளாளர் முரு-கேசன், செயலாளர் பிரு ஆனந்த்பிரகாஷ், ஆசிரி-யர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவி-லான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
