/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயற்குழு
/
மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயற்குழு
ADDED : செப் 02, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி:தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின், தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பச்சியப்பன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். இதில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்திற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்ப்பது, மாற்றுத்திறனாளி கள் நலன் சார்ந்த மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை தெரிவித்து, அதில் அனைவரும் பயனடைய செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.