/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
/
பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
ADDED : ஜன 26, 2025 04:00 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட பாட்டாளி சொந்தங்கள் சந்திப்பு கூட்டத்தில், திரளாக பங்கேற்க, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தர்ம-புரி பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான வெங்கடேஷ்வரன், மற்றும் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் கூட்-டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட பாட்டாளி சொந்தங்களை சந்திக்கும் கூட்டம், நாளை திங்கட்கிழமை, காலை 10:00 மணிக்கு தர்மபுரி வன்னியர் திருமண மண்ட-பத்தில் நடக்கவுள்ளது. இதில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., தலைவர், அன்புமணி ஆகியோர் பேருரையாற்றுகி-றார்கள். பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., பேசுகிறார். இதில், பா.ம.க., முன்னாள் எம்.பி.,க்கள் செந்தில், பாரிமோகன் மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செய-லாளர் வேலுசாமி உட்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர். அது-சமயம், தர்மபுரி மாவட்ட, பா.ம.க., வன்னியர் சங்கத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அணி, துணை உட்பட அனைத்து நிலை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என அனைவரும், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.