/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாவட்ட விளையாட்டு போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
/
மாவட்ட விளையாட்டு போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
மாவட்ட விளையாட்டு போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
மாவட்ட விளையாட்டு போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : நவ 18, 2025 01:53 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், 2025--2026 கல்வியாண்டில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில், 17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட பூப்பந்து, கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் மற்றும் சதுரங்கம், பீச் வாலிபால் ஆகிய போட்டிகளில், சரகம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில், அதிகாரப்பட்டி பள்ளி மாணவ, மாணவியர், தொடர்ந்து, 16 ஆண்டுகளாக வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல், பிரபு மற்றும் அருணாவதி ஆகியோரை, பள்ளியின் தலைமையாசிரியர் அன்பரசன் மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.