/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாளையம் சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிக்க மனு
/
பாளையம் சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிக்க மனு
ADDED : நவ 18, 2025 01:53 AM
தர்மபுரி, தர்மபுரி, விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம் வழியாக, தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், தொப்பூர் கணவாய் பகுதி வழியாக செல்லும் இச்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சாலையில், மிகவும் மோசமான மற்றும் வளைவான சாலைகள் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டதில், கடந்த, 10 ஆண்டுகளில், 478 விபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, 905 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.
இதில், பாளையம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, உயர்மட்ட மேம்பால பணிகள் முடியும் வரை, பாளையம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.

