/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தபால் ஓட்டுக்களை கவர தி.மு.க., - அ.தி.மு.க., முயற்சி
/
தபால் ஓட்டுக்களை கவர தி.மு.க., - அ.தி.மு.க., முயற்சி
தபால் ஓட்டுக்களை கவர தி.மு.க., - அ.தி.மு.க., முயற்சி
தபால் ஓட்டுக்களை கவர தி.மு.க., - அ.தி.மு.க., முயற்சி
ADDED : ஏப் 05, 2024 01:19 AM
அரூர்:அரசு
ஊழியர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால்
ஓட்டுக்களை கைப்பற்ற, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தீவிர முயற்சியில்
இறங்கியுள்ளனர்.
லோக்சபா தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு
தமிழகத்தில் வரும், 19ல் நடக்கவுள்ளது. இதில், 85 வயதை கடந்த மூத்த
குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் ஓட்டுப்போட தேர்தல்
ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தேர்தல் பணிக்கு செல்லும்,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கள் அளிப்பர்.
இந்நிலையில், தர்மபுரி தொகுதியில் இந்த ஓட்டுக்களை கைப்பற்றும்
முயற்சியில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் களமிறங்கி
உள்ளனர். புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன
உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ -ஜியோ
கூட்டமைப்பினர், தி.மு.க., அரசுக்கு எதிராக பல போராட்டங்களை
நடத்தினர். மேலும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, அரசு
ஊழியர்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதை குறி வைத்து,
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின்
வீடுகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,
முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பெற, கவனிப்பும்
செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு பதிலடியாக, தி.மு.க.,
நிர்வாகிகளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுக்களை
பெற களமிறங்கியுள்ளனர். இதற்காக, பூத் கமிட்டி உறுப்பினர்கள்,
தபால் ஓட்டுக்கள் குறித்த விபரத்தை வைத்து, வீடு வீடாக சென்று
அவர்களிடம் ஆதரவை திரட்டுவதுடன், முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால்
ஓட்டுக்களை பெற கவனிப்பும் செய்து வருகின்றனர்.

