/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டியில் தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
/
பாப்பிரெட்டிப்பட்டியில் தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 17, 2024 12:39 PM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க. சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, தர்மபுரி வடக்கு, கிழக்கு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார், கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், கடத்துார் பேரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓட்டுச்சாவடி முகவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடத்துார், பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட செயலர், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமையில் நடந்தது.
அவைத் தலைவர் மனோகரன், மாநில வர்த்தக அணி துணை செயலர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலர் வழக்கறிஞர் மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் பழனியப்பன் பேசுகையில், ''லோக்சபா தேர்தலில் பொறுப்பாளர்கள் தங்களுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி வாக்காளர்களை குழுக்களாக பிரித்து, அவர்களை பற்றிய விவரங்களை சேகரித்து ஓட்டு சேகரித்தலில் ஈடுபட வேண்டும். முகவர்கள் வாக்காளர்களை தொடர்பு கொண்டு வாக்குகளை பெற முயல வேண்டும். தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற முகவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.
ஒன்றிய செயலர்கள் மாது, சக்திவேல், சிவப்பிரகாசம், நெப்போலியன், சரவணன், முத்துக்குமார், கெளதமன், ஜெயசந்திரன், மோகன், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.