/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர்.,ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர்.,ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம்
தி.மு.க., கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர்.,ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம்
தி.மு.க., கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர்.,ஐ எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:35 AM
தர்மபுரி, இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வான எஸ்.ஐ.ஆர்.,ஐ எதிர்த்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார்.
இதில், தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு என்ற பெயரில் நடந்தது வரும் பணியை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர். இதில், எஸ்.ஐ.ஆர்., கண்டித்து, பதாகைகள் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், முன்னாள் பொறுப்பாளர் தர்மசெல்வன், தர்மபுரி நகர செயலாளர்கள் நாட்டான்மாது, கவுதம், கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார், பாலக்கோடு டவுன் பஞ்., சேர்மன் முரளி, தி.மு.க., நிர்வாகிகள் சூடப்பட்டி சுப்பிரமணி மற்றும் காங்., - வி.சி., - கம்யூ., கட்சிகள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.