/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அலுவலர்களுடன் கூட்டம்
/
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அலுவலர்களுடன் கூட்டம்
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அலுவலர்களுடன் கூட்டம்
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அலுவலர்களுடன் கூட்டம்
ADDED : நவ 12, 2025 01:35 AM
தர்மபுரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து, அரசு அலுவலர்களுடனான கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால், நவ., மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, நவ., 15 அன்று, 13 தேர்வு மையங்களில், 3,511 தேர்வர்களும், தேர்வு தாள் 2, நவ., 16 அன்று, 62 தேர்வு மையங்களில், 16,989 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். இதில், வினாத்தாள்கள் எடுத்து செல்லும் வாகனத்துடன், தேர்வு நடக்கும் நாட்களில் பாதுகாப்பு பணிக்காக, ஆயுதம் தாங்கிய போலீசார் அனுப்பி வைக்க வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில், 24 மணி நேரமும் வினாத்தாள் பெறப்பட்ட நாள் முதல் தேர்வு முடியும் நவ., 16 வரை பாதுகாப்பு பணிக்கு போலீசார் நியமனம் செய்ய வேண்டும்.
அனைத்து துறை அலுவலர்களும் தேர்வு சிறப்பான முறையில் நடக்க, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்வு மையங்களில் சரியான முறையில் அறிவிப்புகளை பலகைகளில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

