/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்சாரம் பாய்ச்சி விலங்கு வேட்டை: இருவருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்

ADDED : நவ 12, 2025 01:36 AM
அரூர், அரூர் அருகே, மின்சாரம் பாய்ச்சி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற தந்தை, மகனுக்கு, 2.50 லட்சம் ரூபாயை அபராதமாக வனத்துறையினர் விதித்தனர்.
மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத்துக்கு கிடைத்த தகவலின் படி, வனவர்கள் விவேகானந்தன், பவித்ரா, ஐயப்பன், வனக்காப்பாளர்கள் ரமேஷ்குமார், இளவரசன், வனக்காவலர் லட்சுமி ஆகியோர், நேற்று காலை, 11:00 மணிக்கு வாதாப்பட்டி பிரிவு, செல்லம்பட்டி பீட் காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பொய்யப்பட்டியை சேர்ந்த சந்திரன், 62, அவரது மகன் சந்திரகாந்த், 42, ஆகியோர், அவர்களது பட்டா நிலத்தில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சி, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து, மின் ஒயர்கள், கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, சந்திரன், சந்திரகாந்த் ஆகிய இருவரையும் வனத்துறையினர், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன் ஆஜர்படுத்தினர். அவர், இருவருக்கும் தலா, 1.25 லட்சம் ரூபாய் என, மொத்தம், 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.