/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி கிராம மக்கள் தர்ணா
/
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி கிராம மக்கள் தர்ணா
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி கிராம மக்கள் தர்ணா
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி கிராம மக்கள் தர்ணா
ADDED : நவ 12, 2025 01:36 AM
தர்மபுரி, நல்லம்பள்ளி அருகே, பூதனஹள்ளியில் பாதிப்பை ஏற்படுத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி, கிராம மக்கள் நேற்று, நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பூதனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பகுதியில், 2 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை கையகப்படுத்தி, தர்மபுரி நகராட்சி குப்பையை சேமித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் செய்ய அரசு, திட்டத்தை தயார் செய்துள்ளதாக, கிராம மக்களுக்கு தெரியவந்தது.
இத்திட்டத்தை நிறைவேற்றினால், நிலத்தடி நீர் மாசடையும், விவசாய விளைநிலங்கள் மலட்டுத்தன்மை ஏற்படுவதுடன், ஊராட்சி குடியிருப்பு மக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பூதனஹள்ளி பஞ்.,ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி, நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகம் அலுவலகம் முன், பூதனஹள்ளி கிராமத்தை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தகவலறிந்து வந்த நல்லம்பள்ளி பி.டி.ஓ.,க்கள் கோவிந்தசாமி, நீலமேகம் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, கிராம மக்கள் அனுமதியில்லாமல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை தொடர்ந்து, கிராம மக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

