/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'தமிழகத்தில் தி.மு.க., - காங்., நல்ல கூட்டணியாக உள்ளது'
/
'தமிழகத்தில் தி.மு.க., - காங்., நல்ல கூட்டணியாக உள்ளது'
'தமிழகத்தில் தி.மு.க., - காங்., நல்ல கூட்டணியாக உள்ளது'
'தமிழகத்தில் தி.மு.க., - காங்., நல்ல கூட்டணியாக உள்ளது'
ADDED : அக் 17, 2025 01:52 AM
அரூர், ''தமிழகத்தில், தி.மு.க., - காங்., நல்ல கூட்டணியாக உள்ளது,'' என, முன்னாள் தமிழக, காங்., தலைவரும், சொத்து பாதுகாப்பு குழு தலைவருமான தங்கபாலு கூறினார்.
தர்மபுரி மாவட்டம், அரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காங்., கட்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் சொத்துகள் உள்ளன. அதை முறைப்படுத்த முதல்கட்டமாக, சொத்து பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகிறோம்.
தேர்தல் கூட்டணி, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கொள்கை முடிவுகளை அகில இந்திய தலைமை தான் எடுக்கும். மாநிலத்திலுள்ள எந்த நிலை நிர்வாகிகளுக்கும், கூட்டணி நிலைபாட்டை சொல்ல, அதிகாரம் வழங்கவில்லை. தமிழகத்தில், தி.மு.க., -- காங்., நல்ல கூட்டணியாக உள்ளது. இதன் தலைவராக தமிழக முதல்வர் உள்ளார். வெற்றி கூட்டணியாக உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.கரூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின், த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் ஆகியோரிடம் கேட்டறிந்தார். உயிரிழந்தவர்களுக்கு, அவர்களது குடும்பத்தினரிடம், காங்., அறக்கட்டளை சார்பில் தலா, 2.50 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.