/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துார் ஏரிக்கரையில் 1,250 பனை விதை நடவு
/
கடத்துார் ஏரிக்கரையில் 1,250 பனை விதை நடவு
ADDED : அக் 17, 2025 01:52 AM
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பேரூராட்சியில் உள்ள ஐயன் ஏரிக்கரைகளில், 1,250 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. 'அடுத்த தலைமுறையை காக்க ஒன்றுபடுவோம்' என்ற நோக்கில், ஆண்டுதோறும் பனை விதை நடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு, கடத்துார் ஏரி, ஐயன் ஏரிகளில், 1,250க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது. இதில், பேரூராட்சி தலைவர் மணி, பனை விதை நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், செயல் அலுவலர் விஜயசங்கர், பேரூராட்சி துணை தலைவர் வினோத் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி மாணவர்கள்
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி பசுமை படை சார்பில், பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. ஏலகிரி பெரிய ஏரியில் நடந்த நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். இதில், ஏரிக்கரையில், மாணவ, மாணவியர், 3,000 பனை விதைகளை நடவு செய்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு, பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.